search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறையில் இருந்தே வென்ற  அம்ரித்பால் சிங் எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு
    X

    சிறையில் இருந்தே வென்ற அம்ரித்பால் சிங் எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

    • மக்களவை தேர்தலில் காலிஸ்தான் போராளி அம்ரித்பால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • அம்ரித்பால் சிங், மக்களவை எம்.பி.யாக பதவியேற்க ஜூலை 5 முதல் 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலம் காதூர் சாஹிப் தொகுதியில் சிறையில் உள்ள காலிஸ்தான் போராளி அம்ரித்பால் சிங் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அதே போல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உபா சட்டத்தில் கைதாகி திகார் சிறையில் உள்ள ஷேக் அப்துல் ரஷீத் சுயேட்சையாக போட்டியிட்டு முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

    சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற 2 எம்.பி.க்களும் சிறையில் உள்ளதால் அவர்கள் எவ்வாறு பாராளுமன்றம் செல்வார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், நேற்று சிறையில் உள்ள அப்துல் ரஷீத் எம்.பி. ஆக பதவி ஏற்பதற்காக ஜூலை 5 ஆம் தேதி 2 மணி நேரம் கஸ்டடி பரோல் கொடுத்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனையடுத்து, இன்று காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங், மக்களவை எம்.பி.யாக பதவியேற்க ஜூலை 5 முதல் 4 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்தாண்டு ஏப்ரலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான இவர், தற்போது அசாம் மாநில சிறையில் உள்ளார்

    சிறையில் உள்ள இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தால் தங்களின் எம்.பி பதவியை அவர்கள் இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×