என் மலர்
இந்தியா

ஓட்டல் மொட்டை மாடியில் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர்.. பெங்களூருவில் பயங்கரம்

- நட்பாக பேசி ஓட்டலுக்கு டின்னருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
- யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி காலியில் அனுப்பி வைத்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் இளம்பெண் ஒருவர் கோரமங்களா பகுதியில் நான்கு ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியை சேர்ந்த 33 வயது திருமணமான பெண் ஒருவர் பெங்களூருவில் தங்கி கேட்டரிங் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) கோரமங்கலாவில் உள்ள ஜோதி நிவாஸ் கல்லூரி அருகே அந்த பெண் நின்றுகொண்டிருந்தபோது ஏற்க்கனவே அறிமுகமான ஒரு இளைஞன் தனது மூன்று நண்பர்களுடன் அந்த பெண்ணை அணுகினார். அவருடன் நட்பாக பேசி ஓட்டலுக்கு டின்னருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
டின்னருக்கு பிறகு அவர்கள் நான்கு பேரும் அந்தப் பெண்ணை ஓட்டலின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் அந்தப் பெண்ணை அவர்கள் அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்கு வந்த பிறகு, அந்தப் பெண் தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறியபின் விஷயம் காவல் நிலையத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த போலீஸ், குற்றாவளிகளின் மூன்று பேரை கைது செய்தது.
அவர்கள் அனைவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், ஓட்டல்களில் வேலை செய்பவர்கள் என்றும் தெரிவித்தனர். நான்காவது குற்றவாளியும் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அவரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.