search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒடிசா ரெயில் விபத்து- புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆதரவற்று கிடக்கும் 52 சடலங்கள்
    X

    ஒடிசா ரெயில் விபத்து- புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆதரவற்று கிடக்கும் 52 சடலங்கள்

    • உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
    • 5 சடலங்களை ஒப்படைக்கும் செயல்முறை நடந்து வருகிறது.

    ஒடிசாவில் கடந்த ஜூன் 2ம் தேதி அன்று சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 291 பேர் உயிரிழந்தனர். மேலும், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    மருத்துவமனைகளில், உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அடையாளம் தெரியாமல் இன்னும் 52 உடல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்னா தாஸ் கூறியதாவது:-

    புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 81 உடல்கள் உள்ளன. ஒரே சடலத்தை அடையாளம் கண்டு பலர் உரிமைக் கோரி வருகின்றனர். இதனால், அவற்றின் மாதிரிகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

    இதில், 29 சடலங்களுக்கான உறுதிப்படுத்தல் பெறப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 5 சடலங்களை ஒப்படைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. மீதமுள்ள 52 உடல்களை அடையாளம் காண இதுவரை யாரும் வரவில்லை.

    மாநில அரசின் அறிவுறுத்தலின்படி, புவனேஸ்வர் நகராட்சி கார்ப்பரேஷன் (பிஎம்சி) உடல்களை அவர்களின் சொந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதோடு யாராவது உடலை அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல விரும்பவில்லை என்றால், புவனேஸ்வரில் இரண்டு இடங்களில் தகனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×