search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய விவகாரம்: என்ஜின் டிரைவர் உள்பட 6 பேர் சஸ்பெண்ட்
    X

    டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய விவகாரம்: என்ஜின் டிரைவர் உள்பட 6 பேர் சஸ்பெண்ட்

    • டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை பணிநீக்கம் செய்து வடக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் கதுவா ஸ்டேஷனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரக்கு ரெயில் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. ஹேண்ட் பிரேக் போடாமல் டிரைவர் என்ஜினில் இருந்து கீழே இறங்கினார். தண்டவாள பாதை சாய்வாக இருந்ததால் திடீரென அந்த சரக்கு ரெயில் பதான்கோட் நோக்கி ஓடத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயிலை நிறுத்த முடியாமல் தவித்தனர்.

    சுமார் 80 கி.மீ. தூரம் வரை ஓடிய அந்த சரக்கு ரெயில் பஞ்சாப் முகேரியன் ஹோஷியார்பூரில் அந்த சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், டிரைவர் இல்லாமல் சரக்கு ரெயில் ஓடிய சம்பவம் தொடர்பாக என்ஜின் டிரைவர் உள்பட 6 பேரை வடக்கு ரெயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

    இதுகுறித்த நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட என்ஜின் டிரைவர் அலட்சியமாக செயல்பட்டதே இச்சம்பவத்திற்கு காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் என்ஜின் டிரைவர் சந்தீப்குமாரை சஸ்பெண்ட் செய்து வடக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    Next Story
    ×