search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹஜ் பயணத்தில் 98 இந்தியர்கள் உயிரிழப்பு- வெளியுறவுத் துறை அமைச்சகம்
    X

    ஹஜ் பயணத்தில் 98 இந்தியர்கள் உயிரிழப்பு- வெளியுறவுத் துறை அமைச்சகம்

    • இதுவரை 1,75,000 இந்தியர்கள் ஹஜ்ஜுக்காக சவுதிக்கு வருகை.
    • கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின்போது 187 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    மக்காவில் ஹஜ் பயணத்தின்போது இந்த ஆண்டு 98 இந்திய யாத்ரீகர்கள் இறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்தாண்டு 1,75,000 இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், வயது மூப்பு மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின்போது 187 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    நடப்பாண்டில் ஹஜ் பயணத்தின்போது வெப்ப அலை காரணமாக 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மையானவர்கள் மெக்காவில் உயர்ந்து வரும் வெப்பநிலை காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு இதுவரை 1,75,000 இந்தியர்கள் ஹஜ்ஜுக்காக சவுதிக்கு வருகை தந்துள்ளனர்.

    முக்கிய ஹஜ் காலம் ஜூலை 9 முதல் 22 வரை ஆகும்.

    இந்த ஆண்டு ஹஜ் பயணத்தின்போது 98 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் இறந்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டு எண்ணிக்கை 187 ஆக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×