search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    செபி தலைவரிடம் அதானி குழும பங்குகள்? .. புயலைக் கிளப்பிய ஹிண்டன்பர்க் -  காங்கிரஸ் கூறுவது என்ன?
    X

    செபி தலைவரிடம் அதானி குழும பங்குகள்? .. புயலைக் கிளப்பிய ஹிண்டன்பர்க் - காங்கிரஸ் கூறுவது என்ன?

    • ஆகஸ்ட் 12 வரை நடைபெற இருந்த நாடாளுமன்ற கூட்டம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது
    • நாளை இந்திய பங்குச்சந்தையில் சரிவு ஏற்படலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்

    அதானி vs ஹிண்டன்பர்க்

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

    அதானி - செபி தொடர்பு

    இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான தலைவர் மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த பொது நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பயிரை மேயும் வேலி

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பி வெளியிட்டுள்ள பதிவில், யார் பாதுகாக்க வேண்டுமோ அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறார், நாடாளுமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் இப்போது தான் தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    திறந்த புத்தகம்

    இதற்கிடையில் இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று அதானி குழுமம் மறுத்துள்ளது. . ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை, அடிப்படை ஆதாரமற்றவை. எங்களுடைய வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படைத்தன்மை கொண்டவை. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய நபர்களுடன் அதானி நிறுவனம் எனது ஒரு வணிக தொடர்பும் மேற்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. செபி தலைவர் மாதாபாய் புரி புச் மற்றும் அவரது கணவரும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். தங்களது வணிக நடவடிக்கைகள் அனைத்தும் திறந்த புத்தகம் போல வெளிப்படையாக உள்ளன என்று தெரிவித்துள்ளனர். இந்த புதிய ஹிண்டன்பர்க் அறிக்கையால் நாளை இந்திய பங்குச்சந்தையில் சரிவு ஏற்படலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்அதானி குழுமத்தில் செபி தலைவரின் பங்குகள் இருபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றச்சாட்டு

    Next Story
    ×