search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஹேமந்த் சோரன் கைது விவகாரம்- வக்கீல் கபில் சிபல் எம்.பி ஆவேசம்
    X

    ஹேமந்த் சோரன் கைது விவகாரம்- வக்கீல் கபில் சிபல் எம்.பி ஆவேசம்

    • அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பலமுறை கேள்விகள் எழுந்துள்ளன.
    • பாஜக-வின் குறிக்கோள் எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது ஆகும்.

    டெல்லி மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கபில் சிபல் கூறியதாவது:-

    ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அமலாக்கதுறை ஒரு நம்பகத்தன்மையற்றதாக உள்ளது. பதவியில் உள்ள முதல்வர்கள் மீது பொய்யான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறது.

    இது நாட்டில் மிகவும் சோகமான நிலையை உருவாக்கி வருகிறது. இது எங்கேபோய் முடியும்.

    அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பலமுறை கேள்விகள் எழுந்துள்ளன.

    இதற்கு முன்பும் தேர்தலில் போட்டியிட்ட பலரின் பெயர்களை உங்களிடம் கூறி உள்ளேன். அவர்கள் மீது எந்தெந்த வழக்குகள் உள்ளன என்பதை கூறியுள்ளேன்.

    இதுபோல வழக்குகள் உள்ள வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை இதுபோன்ற நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை? பாஜக-வின் குறிக்கோள் எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது ஆகும்.

    இது போன்ற நடவடிக்கையால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளால் பிரசாரம் செய்ய முடியாது. அவர்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்றால், அது கண்டிப்பாக பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×