search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜீரோ பங்களிப்பிற்கு பிறகு... பாஜக வாய்ப்பு வழங்கிய நவீன் ஜிண்டால் குறித்து காங்கிரஸ் கருத்து
    X

    ஜீரோ பங்களிப்பிற்கு பிறகு... பாஜக வாய்ப்பு வழங்கிய நவீன் ஜிண்டால் குறித்து காங்கிரஸ் கருத்து

    • பா.ஜனதா நேற்று வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் நவீன் ஜிண்டால் பெயர் இடம் பெற்றிருந்தது.
    • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் உடனடியாக பா.ஜனதா வாய்ப்பு வழங்கியுள்ளது.

    2024 மக்களவை தேர்தலுக்கான 5-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா நேற்று வெளியிட்டது. இதில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ராமாயணம் டி.வி. தொடரில் ராமர் வேடத்தில் நடித்துள்ள அருண் கோவில் (Arun Govil), தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

    நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் பல வருடங்களாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர் பா.ஜனதாவில் இணைந்துள்ளார். பா.ஜனதாவில் இணைந்துள்ள நிலையில் அவருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    நவீன் ஜிண்டாலுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் "உங்களுக்கு ராட்சத அளவிலான வாஷிங் மெஷின் தேவைப்படும்போது, இது (ஜிண்டால் பாஜக-வில் இணைந்தது) நிகழத்தான் செய்யும். கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்கு ஒரு பங்களிப்பை கூட வழங்காத நிலையில், நான் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன் எனச் சொல்வது மிகப்பெரிய நகைச்சுவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில், ஜிண்டால் மத்திய புலனாய்வுப் பிரிவால் விசாரிக்கப்பட்டு வந்தார். இது தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை பா.ஜனதா தனது கட்சியில் இணைத்துக் கொள்ளும்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து வாய் திறப்பதில்லை என அடிக்கடி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.

    நவீன் ஜிண்டால் இரண்டு முறை குருஷேத்ரா தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×