search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    3 மாத குழந்தையின் முதுகில் 15 செ.மீ. நீள வாலை அகற்றி மருத்துவர்கள் சாதனை
    X

    3 மாத குழந்தையின் முதுகில் 15 செ.மீ. நீள வாலை அகற்றி மருத்துவர்கள் சாதனை

    • மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு ஜனவரி 2024ல் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
    • இரண்டரை மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் வால் அகற்றப்பட்டது.

    தெலுங்கானாவில் உள்ள எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள மருத்துவர்கள், மூன்று மாத கைக்குழந்தையின் வாலை அகற்றும் அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையில், குழந்தையின் லும்போசாக்ரல் பகுதியில் அமைந்துள்ள 15 செ.மீ வால் அகற்றப்பட்டது.

    எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள குழந்தைகள் துறையின் தலைவர் டாக்டர் ஷஷாங்க் பாண்டா தலைமையிலான இந்த அறுவை சிகிச்சை, உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான 40 அறுவை சிகிச்சையில் இதுவும் ஒன்றாகும்.

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆண் குழந்தை, 15 சென்டிமீட்டர் நீளமுள்ள மனித வால் லும்போசாக்ரல் பகுதியில் இருந்து வெளியேறி பிறந்தது.

    மனித வால்கள் ஒரு அரிய பிறவி குறைபாடு ஆகும். இதைத்தவிர, குழந்தைக்கு S1 முதல் S5 முதுகெலும்புகள் மற்றும் முதுகெலும்பு நோய்க்குறி ஆகியவற்றுடன் தொடர்புடைய முதுகெலும்பு டிஸ்ராபிசம் இருந்தது. இது அறுவை சிகிச்சையின் சிக்கலை மேலும் அதிகரித்தது.

    இருப்பினும், எய்ம்ஸ் பீபிநகரில் உள்ள மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு கடந்த ஜனவரி 2024ல் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. இரண்டரை மணிநேரம் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலம் வாலை அகற்றி, குழந்தையின் முதுகெலும்பு சரிசெய்யப்பட்டது.

    ஐந்து நாட்களுக்குப் பிறகு, குழந்தை நரம்பியல் குறைபாடுகள் இல்லாமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு காயம் ஆறியதோடு, சிக்கல் ஏதும் ஏற்படவில்லை. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்தவர்கள் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×