என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பாராளுமன்ற தேர்தல்: அஜித் பவார் மனைவி வேட்புமனு தாக்கல் செய்தார்
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
- பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர்.
மும்பை:
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, நாடு முழுவதும் நாளை முதல் கட்ட தேர்தல் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் நடைபெறுகிறது
இந்நிலையில், பாராமதி தொகுதியில் போட்டியிடும் அஜித் பவார் மனைவி சுனேத்ர பவார் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.
வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.