search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்
    X

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்

    • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது.
    • மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக மணிப்பூர் கலவரம் விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.

    மேலும் விலைவாசி உயர்வு, விசாரணை அமைப்புகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க. சார்பில் தம்பிதுரை பங்கேற்றுள்ளனர்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    Next Story
    ×