search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராஜஸ்தானில் இலாகா ஒதுக்கீடு: முதல் மந்திரிக்கு 8 துறைகள், துணை முதல் மந்திரியிடம் நிதித்துறை
    X

    ராஜஸ்தானில் இலாகா ஒதுக்கீடு: முதல் மந்திரிக்கு 8 துறைகள், துணை முதல் மந்திரியிடம் நிதித்துறை

    • ராஜஸ்தானில் அமைச்சரவை இலாகாக்கள் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் பஜன்லால் சர்மா வெளியிட்டுள்ளார்
    • துணை முதலமைச்சர் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன

    ராஜஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து பஜன்லால் சர்மா முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா தேர்வு செய்யப்பட்டார். மேலும் 22 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்ற 22 அமைச்சர்களுக்கு இலாகாக்கல் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில், அவர்களுக்கான துறைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சரவை இலாகா தொடர்பான பரிந்துரையை முதலமைச்சர் பஜன்லால் சர்மா ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். முதலமைச்சரின் இந்த பரிந்துரைக்கு ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்துறை, கலால் வரி, ஊழல் ஒழிப்பு உள்பட 8 துறைகளை தன் வசம் வைத்துக்கொண்டார். துணை முதலமைச்சர் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதலமைச்சரான பிரேம் சந்த் பைரவாவுக்கு உயர்கல்வி, ஆயுர்வேதா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட 6 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    முன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோருக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் கிம்சாரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக மதன் திலாவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×