என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் அமித்ஷா, ராஜஸ்தானில் ஓம் பிர்லா போட்டி
- பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
- குஜராத் காந்தி நகரில் உள்துறை மந்திரி அமித்ஷா போட்டியிடுகிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. வெளியிட்ட அறிவிப்பில் 195 வேட்பாளர்களை அறிவித்தது. வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.
உ.பி.யில் 51, ம.பி.யில் 24, மேற்கு வங்காளத்தில் 20, குஜராத்தில் 15, கேரளாவில் 12, சத்தீஸ்கரில் 11, டெல்லியில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 34 மத்திய மந்திரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் காந்தி நகரில் அமித்ஷாவும், போர்பந்தரில் மன்சுக் மாண்டவியாயும், அருணாசல் பிரதேசத்தில் கிரண் ரிஜிஜுவும் போட்டியிடுகின்றனர்.
நடிகர் சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்தப் பட்டியலில் 47 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 28 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தமிழகத்துக்கு வேட்பாளர் ஒருவரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.