என் மலர்tooltip icon

    இந்தியா

    அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைப் பேச்சு.. மாணிக்கம் தாகூர் மக்களவையில் நோட்டீஸ்
    X

    அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சைப் பேச்சு.. மாணிக்கம் தாகூர் மக்களவையில் நோட்டீஸ்

    • மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகத்தான் தெரிவார்
    • அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே இப்பேச்சு வெளிப்படுத்துகிறது

    பாராளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதித்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் கொடுத்துள்ளார்.

    நேற்று கூட்டத்தொடரின்போது பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது.

    இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் ராகுல் காந்தி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகத்தான் தெரிவார் என்று ராகுல் அமித்ஷாவை விமர்சித்தார்.

    இந்நிலையில் மதவாத சிந்தனை கொண்டவர் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா என்பது அனைவருக்கும் தெரியும், அம்பேத்கர் மட்டுமல்லாது அவரை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை அமித்ஷா புண்படுத்தியுள்ளார்.

    அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே இப்பேச்சு வெளிப்படுத்துகிறது என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இதுகுறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸை தாக்கல் செய்துள்ளார்.

    Next Story
    ×