search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் கூடுகிறது.
    • குளிர்கால கூட்டத் தொடரில் 18 மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை மறுநாள் (4-ம் தேதி) கூடுகிறது. இந்த கூட்டத் தொடர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 19 நாட்களில் 15 அமர்வுகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    குளிர்கால கூட்டத் தொடரில் 18 மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதில் 7 புதிய மசோதாக்கள், 11 நிலுவை மசோதாக்கள் ஆகும்.

    பாராளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்றக் குழு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டம் பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தலைமையில் நடந்தது.

    இதில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அர்ஜுன்ராம், காங்கிரஸ் எம்.பி. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×