search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களை தொடங்கி வைத்த முதலமைச்சருக்கு நன்றி- ஆனந்த் மஹிந்திரா
    X

    மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களை தொடங்கி வைத்த முதலமைச்சருக்கு நன்றி- ஆனந்த் மஹிந்திரா

    • மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் SUVகளான BE6, XEV 9E கார்களுடன் நேரம் செலவிட்ட முதலமைச்சருக்கு நன்றி.
    • அந்த கார்களில் உள்ள தானியங்கி பார்க்கிங் தொழில்நுட்பம் முதலமைச்சருக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

    மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் அப்பதிவிட்டுள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் SUVகளான BE6, XEV 9E கார்களுடன் நேரம் செலவிட்ட முதலமைச்சருக்கு நன்றி. ஆதரவு அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கும் நன்றி. அந்த கார்களில் உள்ள தானியங்கி பார்க்கிங் தொழில்நுட்பம் முதலமைச்சருக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

    எங்கள் நிறுவனத்தின் திறமையான ஆராய்ச்சிக் குழு இந்த வெற்றியை சென்னையில் சாத்தியப்படுத்திக் காட்டியதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×