search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    மேலும் ஒரு பாலம் இடிந்தது.. கடந்த 10 நாட்களில்  6 வது சம்பவம் - அதிர்ச்சியில் மக்கள்
    X

    மேலும் ஒரு பாலம் இடிந்தது.. கடந்த 10 நாட்களில் 6 வது சம்பவம் - அதிர்ச்சியில் மக்கள்

    • பீகாரில் கடந்த அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
    • இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    பீகாரில் கடந்த நாட்களில் அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பாலம் இடிந்துவிழுந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த 10 நாடிகளில் இடிந்த 6 வது பாலம் இதுவாகும். கனமழையால் பீகார் மாநிலம் கிசான்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தாக்கூர்கஞ்ச் நகரின் பண்ட் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததால் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு திடீரென கீறல்கள் விழுந்து ஒரு பகுதி கீழ் இறங்கியதால் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. சில நாடுகளுக்கு முன்புதான் பீகாரில் மதுபானி பகுதியில் கட்டப்பட்டுவந்த 75 மீட்டர் நீளமுடைய பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    முன்னதாக கடந்த வாரம் கிஷன்கஞ்ச் நகரில் 2011 ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்ட 70 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட பாலம், தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இடிந்து விழுந்தது. அதற்கு முன்னர் ஆராரியாவில் உள்ள பக்ரா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலம், திறப்பு விழாவிற்கு முன்னரே இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், படேதா - கரோலி கிராமங்களை இணைக்கும் சிறிய பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்திலும் நேற்று கனமழையால் கிரிதிக் மாவட்டத்தில் உள்ள ஆர்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×