search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டீ, காபி குடிப்பவர்களா நீங்கள்..?- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை
    X

    டீ, காபி குடிப்பவர்களா நீங்கள்..?- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை

    • டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளது. அது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது.
    • ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

    டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளது. அது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. 150 மில்லி கிராம் காபியில் 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. இன்ஸ்டன்ட் காபியில் 50-65 மில்லி கிராம் காஃபின் உள்ளது. டீயில் 30-65 மில்லி கிராம் காஃபின் உள்ளது.

    ஆகவே ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர், காபி குடிக்க வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    ஏனெனில் உணவில் இருந்து உடலுக்குச் செல்லும் இரும்புச் சத்துக்கள் டீ, காபி போன்ற பானங்களால் தடைப்படக்கூடும் எனவும் இதனால் அனீமியா, ரத்த சோகை போன்ற உடல் நலக்குறைபாடு ஏற்படலாம் எனவும் அதிகளவில் காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் எனவும் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

    அதே சமயம் பால் இல்லாமல் தேநீர் அருந்துவதால் ரத்த ஓட்டம் சீராகிறது எனவும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதறகான வாய்ப்பு குறைகிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    தேநீர் மற்றும் காபி குடிப்பதை கட்டுப்படுத்தி, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சிகள் மற்றும் கடல் உணவுகளை சாப்பிடலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை குறைவான அளவே எடுத்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×