search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆம் ஆத்மி வளர்ச்சியை தடுக்கவே தலைவர்கள் கைது: பா.ஜ.க.-வை சாடிய கெஜ்ரிவால்
    X

    ஆம் ஆத்மி வளர்ச்சியை தடுக்கவே தலைவர்கள் கைது: பா.ஜ.க.-வை சாடிய கெஜ்ரிவால்

    • ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
    • எங்களை அழிக்க பா.ஜ.க. மூன்று திட்டங்களை வகுத்துள்ளது என்றார் டெல்லி முதல் மந்திரி.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி எம்.பி.யான ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வீடியோ வெளியிட்டு போராட்டம் அறிவித்தார். அதில், பிரதமருக்கு சொல்கிறேன். ஆத் ஆத்மி கட்சியினர் யாரை வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். மனிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் என ஒவ்வொருவராக சிறையில் அடைக்கலாம். மே 19-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட போகிறோம். நீங்கள் விரும்பும் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்யலாம் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் டெல்லி முதல் மந்திரியும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

    ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியைப் பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆம் ஆத்மி கட்சியை அழிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியை நசுக்க விரும்புகிறது.

    ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து வருவதாகவும், அவர்களது பணி உலகம் முழுவதும் விவாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். அவருக்கு தெரிந்த நபர்கள் எனக்கு தெரியும். அவர்கள் என்னிடம் இதை தெரிவித்தனர்.

    ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் ஒழிக்க 'ஆபரேஷன் ஜாது' என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் பெரிய தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

    ஆம் ஆத்மி கட்சியின் வங்கி கணக்கு தேர்தலுக்கு பிறகு முடக்கப்படும். வங்கி கணக்குகள் முடக்கப்படும் என அமலாக்கத்துறை வக்கீல் ஏற்கனவே கோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளார். இப்போது எங்கள் கணக்கை முடக்கினால் எங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என்று கூறினார்.

    வங்கி கணக்கு முடக்கம், அலுவலகத்துக்கு சீல், நாங்கள் வீதிக்கு கொண்டு வரப்படுவோம். இவைதான் பாரதிய ஜனதாவின் திட்டமாகும்.

    2015-ம் ஆண்டு நான் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் (பா.ஜ.க.) எழுப்பினார்கள். இப்போது மதுபான கொள்கை ஊழல் நடந்ததாகச் சொல்கிறார்கள். ஊழல் நடந்ததா என்று மக்கள் கேட்கிறார்கள். பணம் எங்கே? மற்ற இடங்களில் சோதனை நடக்கும்போது நோட்டுகள், தங்கம் மீட்கப்படுகிறது. ஆனால் இங்கு எதுவும் கிடைக்கவில்லை. பாரதிய ஜனதாவினர் பொய் வழக்குகளைப் போட்டு கைதுசெய்தனர் என தெரிவித்தார்.

    Next Story
    ×