search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    Madhapar
    X

    17 வங்கிகள், ரூ. 7000 கோடி வைப்பு நிதி.. ஆசியாவின் பணக்கார கிராமம்.. இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா?

    • ஆசியாவின் பணக்கார கிராமம் இந்திய மாநிலம் ஒன்றில் உள்ளது.
    • பணக்கார கிராமத்தில் மொத்தம் 17 வங்கிகள் உள்ளன.

    ஆசியாவின் பணக்கார கிராமம் எது என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. இந்த கிராமம் இந்தியாவில் தான் உள்ளது. உடனே நாட்டின் பணக்கார நகரங்கள் நினைவுக்கு வருகிறதா? ஆனால் இந்த கிராமம் அதை சுற்றியும் இல்லை.

    நாட்டின் மிகப் பெரிய வியாபாரிகளை உருவாக்கிய குஜராத் மாநிலத்தில் உள்ள கிராமம் தான் ஆசியாவின் பணக்கார கிராமம் என்று தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கச் மாவட்டத்தை அடுத்த மாதபர் என்ற கிராமம் தான் ஆசியாவிலேயே பணக்கார கிராமம் ஆகும்.

    இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான வைப்பு தொகையை வங்கிகளில் செலுத்தியுள்ளனர். மாதபர் கிராமத்தில் பட்டேல் சமூக மக்கள் அதிகம் ஆகும். இங்கு சுமாராக 32 ஆயிரம் பேர் வசிப்பதாக தெரிகிறது. இந்த கிராமத்தில் மொத்தம் 17 வங்கிகள் உள்ளன. இதில் முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அடங்கும்.

    ஹெச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ, பிஎன்பி, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் யூனியன் வங்கி உள்ளிட்டவை இதில் குறிப்பிடத்தக்க பெயர்கள் ஆகும். இதுதவிர பல்வேறு வங்கிகள் இந்த கிராமத்தில் தங்களது கிளையை துவங்க ஆர்வம் கொண்டுள்ளன.

    இந்த கிராமம் இந்த அளவுக்கு செழிப்பாக இருப்பதற்கு காரணம், இங்கு வசிப்பவர்களில் பல குடும்பங்கள் என்ஆர்ஐ வகையை சேர்ந்தவை ஆகும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குடும்பங்கள் இந்த கிராமத்தில் அதிகளவு வசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் முதலீடு செய்கின்றனர்.

    சுமார் 20 ஆயிரம் வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 1200 குடும்பங்கள் வெளிநாடுகள்- குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கின்றன. மத்திய ஆப்பிரிக்காவில் நடைபெறும் பெரும்பாலான கட்டிட வியாபாரங்களில் குஜராத் மக்கள் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர். இதுதவிர பலர் பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் வசிக்கின்றனர்.

    Next Story
    ×