என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
பேட்டரி ஸ்வாப்பிங் எளிதானது அல்ல - ஏத்தர் சிஇஓ
- பாரம்பரியம் மிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன
- ஒரு பேட்டரி சுமார் 10 கிலோ எடையுள்ளது என்பதை நினைவுபடுத்தினார் தருண்
ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ.100 எனும் அளவில் விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தவர்களுக்கு பேட்டரியை பயன்படுத்தி இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் (electric vehicle) நல்ல மாற்றாக உருவெடுத்தது.
ஏத்தர், ஓலா போன்ற புது நிறுவனங்களும், வாகன தயாரிப்பில் பாரம்பரியம் மிக்க பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களும் தங்கள் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம், ஏத்தர்.
வளர்ந்து வரும் இத்துறையில் அடுத்த முன்னெடுப்பாக சார்ஜ் குறைந்தவுடன் தங்கள் இரு சக்கர வாகனத்தில் உள்ள பேட்டரியை, நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் பரிமாற்றி (battery swapping) கொள்ளும் வசதியை ஆங்காங்கே ஏற்படுத்த சில நிறுவனங்கள் முனைந்து வருகின்றன. இவ்வசதியை ஒரு சிறப்பு அம்சமாக கூறி வாகன விற்பனையும் நடந்து வருகிறது.
ஆனால், இந்த முயற்சியை ஏத்தர் நிறுவன தலைமை செயல் அதிகாரி (CEO) தருண் மேத்தா (Tarun Mehta) விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
ஒரு பேட்டரி என்பது 10 கிலோ எடைக்கு குறையாமல் இருக்கும். அதனை மாற்றி பொருத்தும் போது கீழே போட்டு விட கூடாது. வயதானவர்களுக்கு இப்பணி எளிதில்லை. அவர்களுக்கு உதவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு மாற்றலுக்கான பணியகத்தில் 200 பேட்டரிகளாவது எப்போதும் முழு சார்ஜுடன் இருக்க வேண்டும். இதற்கு பெரிய பரப்பளவிலான இடம் தேவைப்படும். இந்த பேட்டரிகள் அனைத்தும் விலையுயர்ந்தவை என்பதால் அவற்றை பாதுகாக்க இரவும் பகலும் பணியில் இருக்கும் பாதுகாப்பாளர்களை நியமிக்க வேண்டும். இவையனைத்தும் செலவினங்களை கூட்டி விடும். இதை தவிர, ஒரு புது எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை வாங்கியவர், சார்ஜிங் நிலையத்தில் உள்ள பழைய பேட்டரியுடன் தனது புது பேட்டரியை பரிமாற்றி கொள்ள தயங்குவார். எனவே நாங்கள் இத்திட்டத்தை பெரிதாக ஆதரிக்கவில்லை.
இவ்வாறு தருண் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்