என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வங்காளதேசத்தினர் என்று உ.பி இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் - இந்து அமைப்பினர் வெறியாட்டம் - வீடியோ
- தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- அங்கு வசித்து வந்த குடுமபங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தினர்.
வங்காள தேசத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்ற நிலையில் நாட்டில் உள்ள நிலையின்மையை பயன்படுத்தி போராட்டக்காரர்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து இன்று தலைநகர் டாக்காவில் பெரிய அளவிலான பேரணி நடந்து வருகிறது. அந்நாட்டின் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற முகமது யூனிசுக்கு தெரிவித்த வாழ்த்துச் செய்தியிலும் பிரதமர் மோடி அதையே வலியுறுத்தியுள்ளார். மேலும் வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவுக்கும் மக்கள் நுழைய வாய்ப்புள்ளதால் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நிலைமை இப்படியாக இருக்க இதைச் சாதகமாகப் பயன்படுத்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்து ரக்ஷா தல் என்ற தீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காசியாபாத் நகரில் உள்ள கவி நகரின் குல்தார் ரயில் நிலையத்தின் அருகே வசித்து வந்த இஸ்லாமியர்களை வங்காளதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று கூறி அவர்களது குடியிருப்பைச் சூறையாடி கபளீகரம் செய்துள்ளனர். தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த குடிசைப் பகுதியில் சுமார் 100 - 150 குடும்பங்கள் இருக்கிறது. இரவு 7.30 மணியளவில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமியர்களின் கூடாரங்களைப் பிய்த்து எறிந்து அவர்களின் உடைகளையும், உடைமைகளையும் தீவைத்து எரித்துள்ளனர். islamiyargalaiலத்திகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் அவர்கள் பதிவேற்றியுள்ளனர். இதே வாரத்தில் அப்பகுதியில் அந்த அமைப்பினர் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இது.
Gaziabad up.hindu Muslim Ekta sabka sath sabka vikas pic.twitter.com/0UQRBHvMME
— Amjad Malik (@AmjadMalik93192) August 10, 2024
#WATCH:अवैध बांग्लादेशियोंके खिलाफ फूटा ग़ज़ियाबाद के हिन्दुओं का गुस्साझोपड़ियों में लगा रखे थे बांग्लादेश के झंडेबांग्लादेश में मारे जा रहे हिन्दुओं व रेप की जारही बेटियों के हाल से नाराज़ है हिन्दू।। ⬇️#Bangladesh #Bangladeshi #Muslim #Gaziabad pic.twitter.com/YniikAI5ie
— (((Bharat)))®??? ?? ?? (@Topi1465795) August 10, 2024
தாக்குதல் குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், 'திடீரென்று 30க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து இஸ்லாமிய குடும்பத்தினரை தேடி தாக்குதல் நடத்தினர். அந்த குடுமபங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தினர். நாங்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. நாங்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லியும், அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். அடிப்பதுடன் நிற்காமல் உடைமைகளுக்கு தீயும் வைத்தனர். எல்லாமே சேதமடைந்த பிறகுதான் காவல்துறையினர் வந்தனர்' என்று தெரிவித்தனர்.
தற்போது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அவ்வமைப்பின் தலைவர் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். பலர் தலைமறைவாகியுள்ளனர். இந்து ரக்ஷா தல் தலைவர் பிங்கி சவுத்ரி இந்த தாக்குதலுக்கு தாங்கள் முழுமையாக பொறுப்பேற்பதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்