search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பத்ரிநாத் கோவிலில் மே 4-ம் தேதி நடை திறப்பு
    X

    பத்ரிநாத் கோவிலில் மே 4-ம் தேதி நடை திறப்பு

    • இந்தியாவின் 4 புனிதமான தலங்களில் பத்ரிநாத் திருத்தலமும் ஒன்று.
    • சார் தாம் யாத்திரையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    புதுடெல்லி:

    இமயமலை பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்கள் சார் தாம்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கோவில்களுக்கு செல்லும் யாத்திரையானது சார் தாம் யாத்திரை என அழைக்கப்படுகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் அலக் நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது பத்ரிநாத். இந்தியாவின் புனிதமான யாத்திரை தலங்களில் இது முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. இந்த இடத்தில் பத்ரி நாராயணன் என்ற பெயரில் இறைவன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். இங்குள்ள சுவாரசியமான அம்சங்களில் ஒன்று வெந்நீர் ஊற்று. இதனை தப்ட் குண்ட் என்பார்கள். இது மருத்துவ குணம் கொண்டதாக நம்பப்படுகிறது. அதோடு பக்தர்களால், புனிதமானதாக போற்றப்படுகிறது.

    பக்தர்கள் பத்ரிநாத் கோவிலுக்குள் நுழையும் முன் இந்த சுடுநீரில் நீராடுவது வழக்கம். பத்ரிநாத் கோவில் 3,000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.

    இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இந்த ஆலயம். ஆண்டுக்கு 6 மாதம் மட்டுமே திறந்து வைக்கப்படும்

    இந்நிலையில், இந்த ஆண்டு மே 4-ம் தேதி காலை 6 மணிக்கு பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வசந்த பஞ்சமியை முன்னிட்டு நரேந்திர நகர் அரண்மனையில் இன்று நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு கோவில் நடை திறக்கப்படும் தேதி மற்றும் நேரம் முடிவு செய்யப்பட்டது.

    சார் தாம் யாத்திரையின்போது நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×