என் மலர்
இந்தியா
அரியானாவில் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை
- நண்பர்கள் புனித் மற்றும் குகால் ஆகிய இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்
- ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.
அரியானாவில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள நாராயண்கரில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகி ஹர்பிலாஸ் சிங் ராஜுமஜ்ரா (41 வயது) படுகொலை செய்யப்பட்டார்.
நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு தனது நண்பர்கள் புனித் மற்றும் குகால் ஆகிய இருவருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஹர்பிலாஸ் மற்றும் புனித் ஆகிய இருவரின் மீதும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன.
உடனே அவர்கள் மீட்க்கப்பட்டு சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ஹர்பிலாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவே உயிரிழந்தார். புனித் தற்போது நலமாகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.