search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு- மத்திய அரசு
    X

    விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு- மத்திய அரசு

    • 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்தது.
    • இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது.

    இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.


    Next Story
    ×