என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![விவாதத்தை ஏற்படுத்திய வாலிபரின் வீட்டு வாடகை விவாதத்தை ஏற்படுத்திய வாலிபரின் வீட்டு வாடகை](https://media.maalaimalar.com/h-upload/2025/02/12/9228261-rent.webp)
X
விவாதத்தை ஏற்படுத்திய வாலிபரின் வீட்டு வாடகை
By
மாலை மலர்12 Feb 2025 2:41 PM IST (Updated: 12 Feb 2025 2:43 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அறையின் நடுவில் நின்று கொண்டு பக்கவாட்டில் கைகளை நீட்டினால் 2 சுவர்களையும் எளிதில் தொடமுடிகிறது.
- திரும்பி நின்று கொண்டு கையையும், கால்களையும் நீட்டினால் இரு சுவர்களையும் தொட முடிகிறது.
பெரு நகரங்களில் வீட்டு வாடகை அதிகமாக இருப்பது குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகும். அதுபோன்று பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவில், மிகச்சிறிய அளவு கொண்ட ஒரு அறையை காட்டுகிறார்.
அந்த அறையின் நடுவில் நின்று கொண்டு பக்கவாட்டில் கைகளை நீட்டினால் 2 சுவர்களையும் எளிதில் தொடமுடிகிறது. திரும்பி நின்று கொண்டு கையையும், கால்களையும் நீட்டினால் இரு சுவர்களையும் தொட முடிகிறது. அந்த அளவுக்கு மிகச்சிறிய தீப்பெட்டி வடிவில் இருக்கும் இந்த வீட்டிற்கு மாத வாடகை ரூ.25 ஆயிரம் என கூறுகிறார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் வீட்டு வாடகை தொடர்பாக தங்களது கருத்தக்களை பதிவிட்டதால் அவரது இந்த பதிவு இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
X