search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாடகை பைக் ஓட்டி மாதம் ரூ.85 ஆயிரம் சம்பாதிக்கும் வாலிபர்
    X

    வாடகை 'பைக்' ஓட்டி மாதம் ரூ.85 ஆயிரம் சம்பாதிக்கும் வாலிபர்

    • ரேபிடோ, ஊபர் ஆகிய இரண்டிலும் மாறி மாறி பணியாற்றுவேன்.
    • யாரும் என்னை கேள்வியும் கேட்க முடியாது என கூறியுள்ளார்.

    வேலையில்லா திண்டாட்டம் ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில் பட்டதாரி இளைஞர்கள் பலரும் உணவு வினியோக நிறுவனங்களிலும், வாடகை பைக் ஓட்டும் நிறுவனங்களிலும் பணியாற்றி சம்பாதித்து வருகிறார்கள்.

    அந்த வகையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் ரேபிடோவில் வாடகை பைக் ஓட்டும் இளைஞர் பற்றிய தகவல் உள்ளது. அதில் பேசும் இளைஞர், நான் சராசரியாக ஒரு நாளைக்கு 12 முதல் 13 மணி நேரம் வரை பணியாற்றுகிறேன். மாதம் ரூ. 80 ஆயிரம் முதல் ரூ. 85 ஆயிரம் வரை சம்பாதிக்கிறேன்.

    ரேபிடோ, ஊபர் ஆகிய இரண்டிலும் மாறி மாறி பணியாற்றுவேன். சிலர் எங்கள் பணியை பார்த்து சிரிப்பார்கள். தற்போதைய சூழ்நிலையில் எந்த வேலையிலும் இவ்வளவு சம்பளம் கிடைக்காது. யாரும் என்னை கேள்வியும் கேட்க முடியாது என கூறியுள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் சேகர் இந்த வீடியோவை பகிர்ந்து இந்தியாவில் கிக் பொருளாதாரத்தை பாராட்டி உள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்குவதில் தொழில்நுட்பம் சார்ந்த களங்களின் முயற்சிகளை பாராட்டினார்.



    Next Story
    ×