என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் வந்தடைந்தது ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் வந்தடைந்தது](https://media.maalaimalar.com/h-upload/2023/01/19/1823828-rahul1.webp)
X
ராகுல் காந்தியுடன் பரூக் அப்துல்லா
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காஷ்மீர் வந்தடைந்தது
By
மாலை மலர்19 Jan 2023 11:49 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பல மாநிலங்களைக் கடந்து வந்த இந்த யாத்திரை இன்று காஷ்மீரில் நுழைந்தது.
- காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.
ஸ்ரீநகர்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களைக் கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை நேற்று இமாசல பிரதேசத்தில் நுழைந்தது. கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர்.
இந்நிலையில், இந்த யாத்திரை இன்று காஷ்மீரை வந்தடைந்தது. காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.
காஷ்மீர் வந்தடைந்த ராகுலின் பாதயாத்திரையில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்றார். ராகுல் காந்தியை வரவேற்று அவர் கலந்துரையாடினார்.
Next Story
×
X