search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: பிபவ் குமாருக்கு 5 நாள் காவல்
    X

    ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: பிபவ் குமாருக்கு 5 நாள் காவல்

    • கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
    • ஆம் ஆத்மி எம்.பி. தாக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச்செயலாளரால் தாக்கப் பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்வாதி மாலிவால் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது, பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர்.

    கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாதி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜ.க.வின் சதி என ஆம் ஆத்மி கட்சியின் மந்திரி அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அதிஷி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜ.க. கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ம் தேதி அனுப்பி பா.ஜ.க. சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால் அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜ.க.வின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளரான பிபவ் குமாரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பிபவ் குமார் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

    Next Story
    ×