என் மலர்
இந்தியா
வயிற்றில் பாய்ந்த தோட்டா.. வலியுடன் பல கிமீ ஜீப்பை ஓட்டி பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்
- 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஜீப்பை துரத்தி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- ஒரு தோட்டா ஓட்டுநர் சந்தோஷ் சிங்கின் வயிற்றில் துளைத்து கடுமையாக ரத்தம் கொட்டியுள்ளது.
பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் ஜீப் ஓட்டுநர் ஒருவர், தனது வயிற்றில் புல்லட் காயம் ஏற்பட்ட போதிலும், பல கிமீ வாகனத்தை இயக்கி பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது .
ஜீப் ஓட்டுநர் சந்தோஷ் சிங், 14 பயணிகளுடன் "திலகம்" விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் ஜீப்பை துரத்தி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது ஒரு தோட்டா சந்தோஷ் சிங்கின் வயிற்றில் துளைத்து கடுமையாக ரத்தம் கொட்டியுள்ளது.
அப்போது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மரமா நபர்களிடம் இருந்து தப்பிக்கவும் பல தாங்க முடியாத வழியிலும் பல கிமீ ஜீப்பை ஓட்டி சென்று பயணிகளின் உயிரை அவர் காப்பாற்றியுள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பாக பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தோஷ் சிங்கை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிங்கின் வயிற்றில் இருந்து தோட்டா அகற்றப்பட்டது. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.