search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பா.ஜ.க. கோட்டையில் 1.35 லட்சம் ஓட்டு வாங்கிய நோட்டா - எங்க தெரியுமா?
    X

    பா.ஜ.க. கோட்டையில் 1.35 லட்சம் ஓட்டு வாங்கிய நோட்டா - எங்க தெரியுமா?

    • இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
    • 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலை எந்த நேரமும் மாறும் என்ற சூழலில், மதியம் 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளுள் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ளது. எனவே தற்போதுள்ள நிலவரத்தை வைத்துக்கொண்டு வெற்றியை நிச்சயிக்க முடியாது. 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

    இந்நிலையில் இந்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில். 1.35 லட்சத்திற்கு மேற்பட்டோர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு 60 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    தற்போதைய நிலவரப்படி இந்தூரில் பா.ஜ.க. வேட்பாளர் சுமார் 7 லட்சம் வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க. கோட்டையாக கருதப்படும் இந்தூர் தொகுதியில் இந்த முறை சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×