search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கொண்டாட்டத்துக்கு தயாராகும் பா.ஜ.க.. பூந்தி தயாரிக்கும் பணிகள் தீவிரம்
    X

    கொண்டாட்டத்துக்கு தயாராகும் பா.ஜ.க.. பூந்தி தயாரிக்கும் பணிகள் தீவிரம்

    • காலை 8 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் உடனுக்குடன் முன்னிலை நிலவரங்கள் வந்த வண்ணம் உள்ளன.
    • நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாஜக அலுவலகங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

    பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்த முடிந்த நிலையில் இன்று (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் நாள் இன்று என்பதால் நாடே தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கியுள்ளது.

    இந்த தேர்தலில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கும், காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கும் இடையே இருமுனை போட்டி நடைபெற்றது. எதிரிக்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு வலுவான போட்டியை வழங்கும் வகையில் காங்கிரஸ் இந்தியா கூட்டணியை உருவாக்கியது. அதன்படி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருந்தது.

    இந்நிலையில் இந்த மொத்த தேர்தல் திருவிழாவிலும் முக்கிய நாளான இன்று பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், உலக நாடுகள் என அனைவரின் கண்களும் தேர்தல் முடிவுகளை நோக்கியே குவிந்துள்ளன.

    தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெற்றியைக் கொண்டாட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணி நேற்றே தொடங்கியது. இந்த நிலையில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாட நாடு முழுவதும் உள்ள பல்வேறு பாஜக அலுவலகங்களில் இனிப்புகள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி பூரி, பூந்தி உள்ளிட்ட வகைகள் மும்முரமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் பாஜக ஊடகங்களால் போலியாக திணிக்கப்பட்ட கருத்துக்கணிப்பு என்று இந்தியா கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது, மேலும் கருத்துக்கணிப்புகளுக்கு நேரெதிரான முடிவுகளே வெளியாகும் என்று அடித்துக் கூறுகிறது இந்தியா கூட்டணி. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியுள்ள நிலையில் உடனுக்குடன் முன்னிலை நிலவரங்கள் வந்த வண்ணம் உள்ளன.

    Next Story
    ×