என் மலர்
இந்தியா
டெல்லி சட்டமன்ற தேர்தல்: வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக
- பெண்களுக்கு மாதந்தோறும 2500 ரூபாய் வழங்கப்படும்.
- வீட்டு சமையல் சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும். தீபாவளி மற்றும் ஹோலி 2 சிலிண்டர் இலவசம்.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் பல்வேறு சலுகைகள் வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளன.
இந்த நிலையில் டெல்லி மாநில தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா இதை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ள முக்கியம்சங்கள்:-
* கர்ப்பிணி பெண்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அதனுடன் 6 ஊட்டச்சத்து தொகுப்புகளும் சேர்த்து வழங்கப்படும். இது தவிர முதல் குழந்தைக்கு 5 ஆயிரம் ரூபாயும், 2-வது குழந்தைக்கு 6 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
* பெண்களுக்கு மாதந்தோறும 2500 ரூபாய் வழங்கப்படும்.
* வீட்டு சமையல் சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைக்கு இரண்டு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
* மூத்த குடிமக்கள் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் சேர்த்து மொத்தம் 10 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு பெறுவார்கள்.
* 60 வயது முதல் 70 வயது மூத்த குடிமக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை பென்சன் வழங்கப்படும். 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
* விதவை பெண்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.