என் மலர்
இந்தியா
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்- ரூ.1 கோடி அபராதம்
- வெடிகுண்டு மிரட்டலால் பல விமானங்களின் சேவைகளில் மாற்றமும் தாமதமும் ஏற்பட்டது.
- 600-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானங்களுக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் சோதனையால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதனையடுத்து பலமணி நேரம் நடைபெறும் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரிய வருகிறது. இதனால் பல விமானங்களின் சேவைகளில் மாற்றமும் தாமதமும் ஏற்பட்டது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் விமான பாதுகாப்பு விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தில் 600-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.