என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மாமியாரை பலாத்காரம் செய்த கொடூர மருமகன் - 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
- மது அருந்தியிருந்த மருமகன் தனது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
- இது தொடர்பாக மாமியார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த மருமகனுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இன்று உறுதி செய்தது. இது மிகவும் வெட்கக்கேடான செயல் என்றும், பாதிக்கப்பட்ட பெண் அவருக்கு தாய் போன்றவர் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தனது மாமியாரிடம் மருமகன் சண்டை போட்டுள்ளார். பின்னர் மருமகனின் வற்புறுத்தலின் பேரில் அவரது வீட்டிற்கு மாமியார் சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் மது அருந்தியிருந்த மருமகன் தனது மாமியாரை 3 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பெண் தனது மகளிடம் தெரிவித்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கை 2018 டிசம்பரில் விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், தனது 55 வயது மாமியாரை பலாத்காரம் செய்ததற்காக அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2022 மார்ச் மாதம் குற்றவாளி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மேல்முறையீடு மனுவின் விசாரணையில், "தனது மாமியாருடன் நடந்த உடலுறவு சம்மதத்துடன் நடந்த உறவு என்றும் அது பலாத்காரம் இல்லை" என்றும் குற்றவாளி தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் இந்த வாதத்தை ஏற்க மறுத்த உயர் நீதிமன்றம், 55 வயதான அப்பெண் போலியான குற்றச்சாட்டை முன்வைப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும், ஒருவேளை பரஸ்பர சம்மதத்துடன் இந்த சம்பவம் நடந்திருந்தால் அதை தனது மகளிடம் அவர் சொல்லியிருக்க மாட்டார், போலீசிலும் புகார் அளித்திருக்க மாட்டார் என்று தெரிவித்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது.