search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    பாலியல் உறவுக்குப் பின் காதல் முறிவு..  விருப்பத்துடன் நடந்தது பலாத்காரம் ஆகாது - உயர்நீதிமன்றம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பாலியல் உறவுக்குப் பின் காதல் முறிவு.. விருப்பத்துடன் நடந்தது பலாத்காரம் ஆகாது - உயர்நீதிமன்றம்

    • கல்யாணம் செய்து கொள்ள முன்வராமலேயே 6 வருட காலமாக தொடர்ந்து பாலியல் உறவு வைத்து அதன்பின் பிரிந்து சென்றுள்ளார்
    • விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது [பாலியல் வன்கொடுமை] சட்டப்பிரிவு 375 இந்த கீழ் வராது

    கடந்த 2012 இல் இருந்து பெண் ஒருவர் ஆண் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். அவர்களுக்கிடையில் உடல் ரீதியான உறவும் இருந்து வந்துள்ளது, இதற்கிடையில் அந்த ஆண் இவரிடமிருந்து விலகி முற்றிலுமாக தவிர்த்து விட்டு வேறொரு பெண்ணுடன் காதல் செய்து வந்துள்ளார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த ஆண் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏமாற்றப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஏமாற்றப்பட்ட பெண்ணின் வக்கீல், தனது கட்சிக்காரரை குற்றம்சாட்டப்பட்டவர் கல்யாணம் செய்து கொள்ள முன்வராமலேயே 6 வருட காலமாக தொடர்ந்து பாலியல் உறவு வைத்து அதன்பின் பிரிந்து சென்றுள்ளார் என்ற வாதத்தை முன்வைத்தார்.

    இந்நிலையில் வாதத்தை கேட்ட நீதிபதி, புகார் அளித்துள்ள பெண்ணே, தான் அந்த நபரை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இப்போது அவர்களுக்கிடையில் காதல் இல்லை எனபதற்காக இதற்குமுன் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டது பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவு 375 கீழ் வராது என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

    பழைய சட்டத்தின்படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாரதீய சட்டங்களின்படி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

    Next Story
    ×