search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாலம் இடிந்து விழுந்து விபத்து
    X

    பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாலம் இடிந்து விழுந்து விபத்து

    • ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி பொருட்செலவில் கட்டப்பட்ட வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
    • பீகார் மாநிலத்தில் மட்டும் கடந்த 11 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.

    நாடு முழுவதும் பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் தற்போது தொடர்கதையாகியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பல பாலங்கள் இடிந்து விழுந்த நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட வந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது.

    ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிதிக் மாவட்டத்தில் ஆர்கா நதியின் இடையே 5.5 கோடி பொருட்செலவில் கட்டப்பட்ட வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

    பாலம் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    கனமழையால் ஆர்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளபெருக்கினால் தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

    பீகார் மாநிலத்தில் மட்டும் கடந்த 11 நாட்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.

    1. 18-ந் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது.

    2. 22-ந் தேதி சிவான் மாவட்டத்தில் கண்டக் கால்வாயின் மீது 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறிய பாலம் இடிந்து விழுந்தது.

    3. 23-ந் தேதி, கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்த பாலம் இடிந்து விழுந்தது.

    4. 26-ந் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் மதியா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.

    5. நேற்று பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மாதேபூர் நகரில் பூதாஹி ஆற்றின் மீது 75 மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது.

    Next Story
    ×