என் மலர்
இந்தியா
பா.ஜ.க.வில் கூண்டாக இணைந்த பி.ஆர்.எஸ். கட்சியினர்: தெலுங்கானாவில் பரபரப்பு
- பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி. உள்பட 5 பேர் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளனர்.
- ஒரே நாளில் எம்.பி. உள்பட 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:
தெலுங்கானா மாநிலத்தின் நகர்கர்னூல் தொகுதி பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.யான பொதுகண்டி ராமுலு இன்று அக்கட்சியில் இருந்து விலகினார். அவர் டெல்லியில் பா.ஜ.க. அலுவலகத்தில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
அவருடன் லோக்நாத் ரெட்டி, பொதுகண்டி பரத் பிரசாத், ஜக்கா ரகுநந்தன் ரெட்டி, மெண்டப்பள்ளி புருஷோத்தம் ரெட்டி ஆகியோரும் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
ஒரே நாளில் பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி. உள்பட 5 பேர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Delhi: On joining BJP, BRS leader and Nagarkurnool MP Pothuganti Ramulu says, "PM Modi is a big leader. He is working very hard for the country. I joined the BJP after seeing the work he has been doing for the country. I am ready to do whatever the party gives me..." pic.twitter.com/2kHtv6gL4C
— ANI (@ANI) February 29, 2024