search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பட்ஜெட் 2024 - நிதியமைச்சர் உரையின் சிறப்பம்சங்கள்
    X

    பட்ஜெட் 2024 - நிதியமைச்சர் உரையின் சிறப்பம்சங்கள்

    • நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமனின் 6-வது பட்ஜெட் இது
    • பா.ஜ.க.வின் 10-ஆண்டு கால பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பேசினார்

    2024 ஜூன் 16 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடைகிறது. ஏப்ரல்-மே மாதங்களுக்கு இடையில் 543 இடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழு பட்ஜெட் வெளியிடப்படும்.

    நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 6-வது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக தனது உரையில், 10 ஆண்டு கால பா.ஜ.க. அரசின் பொருளாதார சாதனைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

    தற்போது அரசின் செலவு - ரூ.44.90 லட்சம் கோடி, வரி வருவாய் மதிப்பீடு - ரூ.27.56 லட்சம் கோடி, நிதி பற்றாக்குறை - 5.8 சதவீதம் என உள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய நிதியமைச்சரின் உரையின் சிறப்பம்சங்கள்:

    * வரும் 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டி தரப்படும்.

    * வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு வழிவகை செய்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்

    * நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

    * பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்று நோயை தடுக்க தடுப்பூசி வழங்கும் திட்டம் அறிமுகமாகிறது

    * ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்

    * அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

    * தொழில் தொடங்க, வட்டியில்லா கடன் வழங்க ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நிதியம் அமைக்கப்படும்

    * பால் உற்பத்தியை அதிகரிக்க புது திட்டம் கொண்டு வரப்பட உள்ளது

    Next Story
    ×