என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் 23-ம் தேதி கூடுகிறது: 4 மாநில அதிகாரிகளுக்கு அழைப்பு
- காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதற்காக ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது.
- காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை மறுதினம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.
இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்துள்ளன.
இந்நிலையில், நாளை மறுதினம் 90-வது காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெறவுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் 23-ம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
நாளை மறுதினம் நடக்கும் கூட்டத்தில் ஆணையத்தின் உத்தரவுபடி கர்நாடக மாநிலம் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துள்ளதா என்பது பற்றி கணக்கீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.