என் மலர்
இந்தியா
கேரளாவில் அணுமின் நிலையம்: சீமேனி என்ற இடம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தகவல்
- கேரளாவிற்கு வெளியில் தோரியம் அடிப்படையிலான மின்சார உற்பத்தி நிலையம் அமைக்க கேரள கோரிக்கை
- சீமேனி அணுமின் நிலையம் அமைப்பதற்காக கண்டறியப்பட்டுள்ளது. இது மின்சார தட்டுப்பாட்டை தீர்க்கும்- மத்திய மந்திரி
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், மின்சாரத்துறை மந்திரி கே. கிருஷ்ணன் குட்டி ஆகியோருடன் மத்திய மந்திரி மனோகர் லால் கட்டார் சந்தித்து பேசினார். அப்போது கேரள மாநிலத்தில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அணுமின் நிலையம் அமைப்பது தொடர்பான பரிந்துரையை முன்வைத்தார்.
அணுமின் நிலையத்திற்கு 150 ஏக்கர் நிலையம் ஏற்பாடு செய்து தந்தால் இந்த திட்டம் முன்னோக்கி எடுத்து செல்லப்படும். சீமேனி மற்றும் அதிரபள்ளி ஆகிய இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அப்போது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரயும், திருச்சூர் எம்.பி.யுமான சுரேஷ் குாபி, அதிரபள்ளி முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது எனத் தெரிவித்தார். இதனால் சீமேனி அணுமின் நிலையம் தொடங்குவதற்கு விருப்பமான இடமாக தேர்வு செய்யப்பட இருக்கிறது.
தோரியம் அடிப்படையிலான மின்உற்பத்தி நிலையத்தை கேரளாவிற்கு வெளியில் நிறுவி, கேரளாவிற்கு குறிப்பிடத்தகுந்த மின்சாரம் வழங்க மத்திய அரசு உதவிட வேண்டும் என மத்திய மத்திரியிடம் கேரள மாநில மின்சாரத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.
NTPC Talcher plant-ல் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரை 400 மெகாவாட் மின்சார வழங்க வேண்டும். தற்போதுள்ள விலையில் அடுத்த ஐந்தாண்டுக்கு இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும்.
NTPC Barh வழங்கும் 177 மெகாவாட் மின்சாரம் ஜூன் 2025 வரை நீட்டிக்கப்பட வேண்டும். ஏப்ரல், மே மாதங்களில் 400 மெகாவாட்டாக அதிகரிக்க வேண்டும். Rajasthan Atomic Power Station-ல் இருந்து முன்னுரிமை அடிப்படையில் 350 மெகாவாட் மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது கேரள அரசின் முக்கிய கோரிக்கை ஆகும்.
நான்கு நீண்டகால மின் ஒப்பந்தங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதில் தலையிடுமாறும், மாநிலத்திற்கு 465 மெகாவாட் மின்சாரத்தை கூட்டாக உறுதி செய்வதற்கும் மத்திய மந்திரியிடம் கேரளா அரசு உறுதி வலியுறுத்தியுள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக மனோகர் கட்டார் உறுதி அளித்துள்ளார்.