search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம்
    X

    (கோப்பு படம்)

    அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை கையகப்படுத்த மத்திய அரசு திட்டம்

    • நான்கு அல்லது ஆறு வழிச்சாலைகளாக மாற்றம் செய்யப்படும்.
    • சுங்க வரி வசூல் மூலம் முதலீடுகளை திரும்பப் பெற முடிவு.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய தேசிய பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்கத்தின் 12 வது சர்வதேச மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி, காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை 25 ஆண்டு காலத்திற்கு கையகப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் இந்த நெடுஞ் சாலைகள் 4 அல்லது 6 வழி நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும். பின்னர் இந்த நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கக் கட்டணம் வசூலிக்கும். 13 ஆண்டுகளுக்குப் பின் செலவுகள் உட்பட முழு முதலிடும் முழுமையாக திரும்பக் கிடைத்துவிடும்.


    இதே போல் நாட்டில் 27 பசுமை விரைவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணம் செய்யும் சாலைப் பணிகள் முடிவடைந்து விடும். டெல்லியில் இருந்து ஜெய்பூர் இடையே 2 மணி நேரத்திலும், டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் இடையே 4 மணி நேரத்திலும், செல்லும் வகையில் பசுமை விரைவு நெடுஞ்சாலை பணிள் நடைபெறுகின்றன. டெல்லி-ஸ்ரீநகர் இடையே 8 மணி நேரத்திலும், டெல்லி -மும்பை இடையே 10 மணி நேரத்திலும் செல்கின்ற பசுமை விரைவு நெடுஞ்சாலைகளும் இந்த ஆண்டு இறுக்கும் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×