search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடும்பத்துடன் பலியான சி.இ.ஓ.. 6 பேரின் உயிரை பறித்த பெங்களூரு கார் விபத்து
    X

    குடும்பத்துடன் பலியான சி.இ.ஓ.. 6 பேரின் உயிரை பறித்த பெங்களூரு கார் விபத்து

    • சந்திரம் யெகாபகோல், IAST சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் CEO மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார்.
    • பூர்வீக கிராமத்தில் உடல்நலக்குறைவுடன் இருந்த தந்தையை பார்க்க சந்திரம் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தார்

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே நெலமங்களாவில் நேற்று கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த 5 பேரும், பைக்கில் சென்ற ஒருவர் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    காரில் உயிரிழந்த ஐவரும் டெக் சிஇஓவான சந்திரம் யெகாபகோல்[Chandram Yegapagol] [46 வயது] மற்றும் அவரது குடும்பதினர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

    சந்திரம் யெகாபகோல், IAST சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் CEO மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் பெங்களூரு HSR லே அவுட் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மோர்பாகி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரம். கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூரில் IAST நிறுவனத்தை தொடங்கினார்.

    சம்பவம் நடந்தபோது பல டன் எடையுள்ள அலுமினிய தூண்களை ஏற்றிச் சென்ற ஐஷர் லாரி பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

    முன்னால் சென்ற மற்றொரு வாகனத்தின் மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுநர் முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற லாரி, பாதையை விட்டு விலகி, மீடியனைக் கடந்து சந்திரம் குடும்பத்தினர் பயணித்த வால்வோ காரின் மீது மோதியுள்ளது. காரின் லாரிக்கு அடியில் சிக்கி நசுங்கியது.

    தனது பூர்வீக கிராமத்தில் உடல்நலக்குறைவுடன் இருந்த தந்தையை பார்க்க சந்திரம் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்தபோது இந்த சோக விபத்தானது ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×