என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![கெத்தா.. மாஸா..! 31 மாதங்களுக்கு பிறகு சட்டசபையில் காலடி வைத்த சந்திரபாபு நாயுடு கெத்தா.. மாஸா..! 31 மாதங்களுக்கு பிறகு சட்டசபையில் காலடி வைத்த சந்திரபாபு நாயுடு](https://media.maalaimalar.com/h-upload/2024/06/21/2789421-chandrababu.webp)
கெத்தா.. மாஸா..! 31 மாதங்களுக்கு பிறகு சட்டசபையில் காலடி வைத்த சந்திரபாபு நாயுடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மகத்தான வெற்றியை பெற்றது.
- ஆந்திர சட்டசபைக்குள் நுழைந்தால் இனி முதல்வராக தான் நுழைவேன் என்று சந்திரபாபு நாயுடு சபதம்.
ஆந்திரா சட்டசபையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி அன்று, அப்போது ஆளும் யுவஜன ஸ்ரமிகா ரைத்து காங்கிரஸ் (YSRCP) உறுப்பினர்கள் தெலுங்கு தேச கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவியைப் பற்றி கூறியதாகக் கூறப்படும் தவறான கருத்துக்களுக்காக அவர் சட்டசபையை விட்டு வெளியேறினார்.
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்த விவாதத்தின் போது சந்திரபாபு நாயுடு பெரும் கண்ணீர் போராட்டத்திற்கு பிறகு சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
அப்போது, "இனிமேல் நான் இந்த சட்டசபையில் கலந்து கொள்ள மாட்டேன். நான் முதலமைச்சரான பிறகுதான் சபைக்குத் திரும்புவேன்" என்று கூறினார்.
சட்டமன்ற கூட்டத்தில், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் சட்டசபையை அவமதித்ததாக கூறி தெலுங்கு தேச கட்சி தலைவரும், முதல்வருமான சந்திரபாபு நாயுடு சட்டசபையைவிட்டு வெளியேறினார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மகத்தான வெற்றியை பெற்றது.
175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களையும், அவர்களின் கூட்டணிக் கட்சிகளான ஜன சேனா மற்றும் பாஜக முறையே 21 மற்றும் 8 இடங்களையும் வென்றன.
இதைதொடர்ந்து, சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவி ஏற்றார். ஆந்திர முதலமைச்சராக அவர் நான்காவது முறையாக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தனது சபதத்தை நிறைவேற்றும் வகையில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இன்று சட்டசபையில் நுழைந்தபோது சட்டசபை முழுவதும் எழுந்து நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த காட்சிகளில் காணமுடிந்தது.