என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மிச்சாங் புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்
- ஆந்திரா மற்றும் தமிழகத்தில் புயலால் பரவலான சேதங்களை மேற்கோள் காட்டினார்.
- சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் மத்திய குழுவை அனுப்பு வேண்டும்.
மிச்சாங் புயலால் ஏற்பட்ட அழிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திரா மற்றும் தமிழகத்தில் புயலால் பரவலான சேதங்களை மேற்கோள் காட்டி, சந்திரபாபு நாயுடு அதன் பாதிப்பை பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், "புயலின் தாக்கம் ஆந்திராவில் மட்டும் இல்லாமல், அண்டை மாநிலமான தமிழகத்தையும் பாதித்துள்ளது என்பதை உணர்ந்து, மிச்சாங் புயலை தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று சந்திரபாபு நாயுடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சேதத்தின் அளவை மதிப்பிடுவதற்கும் மத்திய குழுவை அனுப்புமாறு பிரதமர் மோடியை அவர் வலியுறுத்தினார்.
மேலும், "770 கிமீ சாலைகள் சேதம் மற்றும் குடிநீர், நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பிற வசதிகளில் கணிசமான பாதிப்புகளுடன் ரூ. 10 ஆயிரம் கோடி வரை பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பேரிடரை தேசிய பேரிடராக அங்கீகரிப்பது உடனடி நிவாரண முயற்சிகளுக்கு தேவையான உத்வேகத்தை வழங்கும், நீடித்த மற்றும் நீண்ட கால உள்கட்டமைப்பை நிறுவும்" என்று சந்திரபாபு நாயுடு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.