search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தாமோதரன் என்ற செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது
    X

    தாமோதரன் என்ற செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது

    • இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் 19 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
    • இதில் தெலுங்கு திரைப்பட நடிகர் பாலகிருஷ்ணாவும் ஒருவர் ஆவார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

    அதில் 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ உள்பட மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித்குமார், நடிகை சோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தெலுங்கு திரைப்பட நடிகரான நந்தமூரி பாலகிருஷ்ணாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த சமையல்கலை அறிஞர் செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    பத்ம விருது பெற்றவர்களை பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×