search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பால் 1.30 மணிநேரத்தில்  98.4 மி.மீ மழைப்பொழிவு
    X

    கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பால் 1.30 மணிநேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு

    • கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.

    கேரளா மாநிலம் கொச்சி மாவட்டத்தில் மேகவெடிப்பால் 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. பொதுவாக 1 மணி நேரத்தில் 100 மிமீ மழை பெய்வதுதான் மேகவெடிப்பு என்று சொல்லப்படுகிறது.

    கொச்சியில் கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×