என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![அரியானாவில் ஏற்பட்டுள்ள இனக்கலவரம் மனவேதனையை அளிக்கிறது- கேரள முதல்வர் பினராயி விஜயன் அரியானாவில் ஏற்பட்டுள்ள இனக்கலவரம் மனவேதனையை அளிக்கிறது- கேரள முதல்வர் பினராயி விஜயன்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/02/1925770-kerala.webp)
X
அரியானாவில் ஏற்பட்டுள்ள இனக்கலவரம் மனவேதனையை அளிக்கிறது- கேரள முதல்வர் பினராயி விஜயன்
By
மாலை மலர்2 Aug 2023 2:07 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- வன்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
அரியானாவில் விரிவடைந்து வரும் துன்பகரமான வகுப்புவாத மோதலால் மனவேதனை அடைகிறேன். உயிர் இழப்புகள் மற்றும் பரவலான ஆணவக் கொலைகள் மறுக்க முடியாத துயரமான ஒன்று. வன்முறையால் 6 பேர் உயிரிழந்தது மற்றும் வடமாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவர முன்னேற்றங்கள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைவரும் இன நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதில் ஒன்றிணைவோம். வன்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
X