என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
அரியானாவில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது - முன்னாள் முதல்வரை குறி வைக்கும் அமலாக்கத்துறை
- யமுனாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சட்டவிரோதமான சுரங்கப்பணிகள் தொடர்பான மோசடி வழக்கில் சுரேந்தர் சிக்கியுள்ளார்.
- அரியானா முன்னாள் முதல்வர்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தீபேந்தர் சிங் ஹுடாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.
அரியானா மாநிலத்தில் காங்கிரசை சேர்ந்த சோன்பத் தொகுதி எம்.எல்.ஏ சுரேந்தர் பன்வார், பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானாவில் யமுனாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சட்டவிரோதமான சுரங்கப்பணிகள் தொடர்பான மோசடி வழக்கில் சுரேந்தர் சிக்கியுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம் சோன்பத்தில் உள்ள சுரேந்தர் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. இந்நிலையில் அவர் தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மகனையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளது. இவர் காங்கிரசைச் சேர்ந்த அரியானா முன்னாள் முதல்வர்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தீபேந்தர் சிங் ஹுடாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.
முன்னதாக 2005 முதல் 2014 வரை தீபேந்தர் சிங் ஹுடா, அரியானா நகர மேம்பாட்டு மையத்தின் முன்னாள் தலைவர் திரிலோக் சந்த் குப்தா ஆகியோர் R.S. Infrastructure (RSIPL) உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் இணைந்து நகர்ப்புறங்களில் காலனி அமைப்பதாக கூறி சட்டவொரோதமாக நிலங்களை அபகரித்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் அமலாக்கத்துறை, R.S. Infrastructure (RSIPL) ரியல் எஸ்டேட் பிரிவை நடத்தி வரும் M3M ப்ரோமோட்டர்ஸ் நிறுவனம் 10.35 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் காலனி அமைப்பதாக கூறி லைசன்ஸ் வாங்கியது. ஆனால் இதுவரை அங்கு எந்த காலனியும் அமைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அந்த நிலைத்தை Religare Group என்ற மற்றொரு நிறுவனத்துக்கு விற்றுவிட்டதாக M3M ப்ரோமொடேர்ஸ் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்த பரிவதனையின் மூலம் சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூ.300 கோடி பணம் M3M ப்ரோமோட்டர்ஸ் நிறுவனர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாங்கிக்கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த நில மோசடி வழக்கில் முன்னாள் முதலவர் தீபேந்தர் சிங் ஹுடா சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை கருதுகிறது.
நேற்று முன் தினம் மகேந்திரகர் காங்கிரஸ் எம்எல்ஏ ராவ் தன் சிங் தொடர்புடைய ரூ.1400 கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அரியானாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் தொடர்புடைய வழக்குகளில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்துவருவது கவனிக்கத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்