search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாம் மாநில முதல்வரின் பயணச் செலவு குறித்து மக்களவையில்  விவாதம் நடத்த கோரிய காங்கிரஸ் எம்.பி.
    X

    அசாம் மாநில முதல்வரின் பயணச் செலவு குறித்து மக்களவையில் விவாதம் நடத்த கோரிய காங்கிரஸ் எம்.பி.

    • ராகுல் காந்தி நடை பயணம் அசாமில் நுழைய பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தவர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா.
    • இவரின் ஆகாய வழி பயணத்திற்கான மட்டும் அசாம் மாநில அரசு 58 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.

    இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை காங்கிரஸ் எம்.பி.யான கவுரவ் கோகாய், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் விமான போக்குவரத்து செலவு குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். ஆனால், மக்களவை சபாநாயகர் அவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வாரா? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக கோகாய் கூறுகையில் "அசாம் மாநில முதல்வர் மற்ற முக்கிய நபர்களுடன் விமான பயணம் மேற்கொண்டதன் வகைக்காக அசாம் மாநில அரசு 58.23 கோடி ரூபாய செலவு செய்ததாக கூறப்படுகிறது. அதில் அரசு சாராத பயணமம் அடங்கும் எனச் சொல்லப்படுகிறது.

    செலவழிக்கப்பட்டது அனைத்தும் பொதுமக்கள் பணம். அது முக்கியமான வளர்ச்சி திட்டத்திற்கு அல்லது சமூக நலன் தொடர்பான திட்டத்திற்கு செலவழித்திருக்கலாம். அரசு சாரா பயணம் மேற்கொண்டது. நிதி மற்றும் பொறுப்பு தொடர்பாக முக்கிய கவலை அளிக்கிறது" என்றார்.

    அரசியல் நிகழ்ச்சிக்காகவும், அசாம் மாநிலத்திற்கு வெளியே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் வாடகை விமானத்தை பயன்படுத்தியதாக மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

    சமீபத்தில் அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடை பயணம் செல்வதற்கு ஹிமாந்தா பிஸ்வா சர்மா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும், மக்களை போராட்டத்திற்கு தூண்டியதாக ராகுல் காந்தி மீது அசாம் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில்தான் கோகாய் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

    Next Story
    ×